மேற்கு வங்கத்தில் பாஜகவினரின் உயிர் தியாகம் வீணாகாது - ஜே.பி.நட்டா

0 2131
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாஜகவினரின் உயிர் தியாகம் வீணாகாது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாஜகவினரின் உயிர் தியாகம் வீணாகாது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின் நடந்த வன்முறைகளில் பாஜகவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள், கடைகள் தாக்கப்பட்டன.

இந்த நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய நட்டா, இது போன்ற சகிப்பின்மையை கண்டதே இல்லை என்றார். 

அதனைத் தொடர்ந்து, பிரதாப் நகரில் வன்முறை கும்பலால் தாக்கப்பட்ட பாஜகவினரின் வீடுகளுக்கு சென்ற நட்டா, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதனிடையே வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments