இறந்த ஆட்டை சமைப்பதற்காக வாங்கி வந்த தகராறில் தம்பியை குத்தி கொலை செய்த அண்ணன்..

0 33567
திருச்சி மாவட்டம் முசிறி அருகே இறந்த ஆட்டை சமைப்பதற்காக வாங்கி வந்த தகராறில், அண்ணனே தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இறந்துபோன ஆட்டை ஏன் விலைக்கு வாங்கி வந்தாய் எனக் கேட்ட தம்பியை அண்ணன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமராவதி சாலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், ராஜசேகரன், ரவிக்குமார் ஆகியோர் உடன் பிறந்தவர்கள். திங்கட்கிழமை அதே ஊரில் சந்திரா என்பவரது ஆடு ஒன்று இறந்துள்ளது.

அந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவக்குமார் விலை கொடுத்து வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இறந்துபோன ஆட்டை சாப்பிடக் கூடாது, அதை ஏன் வாங்கி வந்தாய் என அண்ணனை கண்டித்துள்ளார் தம்பி ரவிக்குமார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறி, சிவக்குமாரும், மூத்த அண்ணனான ராஜேந்திரனும் சேர்ந்து ரவிக்குமாரை தாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, ரவிக்குமாரை சிவக்குமார் குத்தியதில் அவர் உயிரிழந்தார். சிவக்குமாரையும் ராஜேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments