அம்மா உணவகத்தை தாக்கிய விவகாரம் - இருவர் கட்சியிலிருந்து நீக்கம்

0 5253
சென்னையில் அம்மா உணவக பெயர்ப்பலகை நொறுக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த இருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் அம்மா உணவக பெயர்ப்பலகை நொறுக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த இருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜேஜே நகர் அம்மா உணவக பெயர்பலகைகள் இரண்டு பேர் சேதப்படுத்துவது போன்ற காட்சி இணையதளங்களில் வெளியாகி, சர்ச்சையானது. இதையடுத்து சம்மந்தப்பட்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நவசுந்தர், சுரேந்திரன் ஆகிய அந்த இருவர் மீதும் ஜேஜே நகர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். சம்மந்தப்பட்ட அம்மா உணவகத்தில் கிழித்து எறியப்பட்ட பெயர்ப்பலகைகள் மீண்டும் அங்கே வைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments