’எமனான தந்தையின் டூவிலர்’.... பெற்றோர் அலட்சியத்தால் மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்.!

0 10626

திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் 9ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,.

திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிபட்டு ஊராட்சிக்குட்பட்ட மின்நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் அட்சயா, அதேப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். டூவிலர் ஓட்டுவதில் அலாதி ப்ரியம் கொண்ட அட்சயா தனது தந்தையின் வாகனத்தை ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்,.

இந்த நிலையில், அட்சயா கடைக்கு செல்வதற்காக பிற்பகல் வீட்டில் இருந்த தந்தையின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று, எதிர்பாரத விதமாக அட்சயா வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்,. இதைத்தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சுதாகர் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோரின் அலட்சியத்தால் ஒன்பதாம் வகுப்பு மாணவி, லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments