தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 921
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வருகிற 8ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் என பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் காரணமாக காற்றின் இயல்பு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments