லண்டனில் இருந்து 450 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் சென்னை வருகை

0 1233

ண்டனில் இருந்து 450 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் விமானப்படை விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டன.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்து வருகின்றன. இந்த நிலையில், லண்டனில் இருந்து விமானப்படை விமானம் மூலம் எகிப்து வழியாக 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தது.

இதுதவிர, தலா 46.6 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5ஆயிரம் காலி சிலிண்டர்களும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்திருந்தது.

அதில் முதல் தவணையாக 900 சிலிண்டர்களும் சென்னை வந்தன. இதனிடையே இந்தியாவில் கூடுதலாக தயாரிக்கப்படும் ஆக்சிஜனை சேமித்து வைக்க, ஜெர்மனியில் இருந்து 4 கிரையோஜெனிக் கண்டெய்னர்களும் சென்னை வந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments