ஐதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா..!

0 1971

ந்தியாவில் முதல்முறையாக தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள நேரு விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததை அடுத்து RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் அங்குள்ள 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்ட சிங்கங்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பூங்காவின் இயக்குநர் Siddhanand Kukrety தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் மகாணத்தில் 8 சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கும், ஹாங்காங்கில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments