ஒரே ஜவுளி கடையில் தொடர் திருட்டு... சிசிடிவியால் சிக்கிய 5 பெண்கள்..!

0 3085

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஒரே ஜவுளி கடையில் 4 முறை திருடிய 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் உள்ள ஜவுளி கடையில் இவர்கள் திருடும் காட்சி சிசிடிவியில் பதிவானது.

நேற்று மாலை இவர்கள் சேலை திருட்டில் ஈடுபடும் போது கடை உரிமையாளரும் அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து கடையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீவைகுண்டம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த லட்சுமி,பார்வதி,நம்பிகண்ணு,சுப்பம்மாள்,ஆச்சியம்மாள் ஆகியோர் இதே கடையில் மூன்று முறை சுமார் 25 பட்டு சேலைகளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments