திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீவிபத்து..! ஆஸ்தான மண்டபக் கடைகளில் பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

0 1194
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீவிபத்து..! ஆஸ்தான மண்டபக் கடைகளில் பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஆஸ்தான மண்டபத்தில் ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள சூழலில், அங்குள்ள போட்டோ ஸ்டூடியோ கடையில் பணியாற்றும், திருச்சானூரை சேர்ந்த மல்லி ரெட்டி என்பவர் நேற்று இரவு கடையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அந்த கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி மல்லிரெட்டி உயிரிழந்தார். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர், தீயை அணைத்து கருகிய நிலையில் இருந்த மல்லி ரெட்டியின் உடலை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments