"செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்" -மு.க.ஸ்டாலின்

0 3161
" கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்கள்" -மு.க.ஸ்டாலின்

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்றும், முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments