பிரிட்டன் அரசு அனுப்பி வைத்த கோவிட் நிவாரணப் பொருட்கள் 4வது தவணையாக டெல்லி வந்தன..!

0 862
பிரிட்டன் அரசு அனுப்பி வைத்த கோவிட் நிவாரணப் பொருட்கள் 4வது தவணையாக டெல்லி வந்தன..!

பிரிட்டன் அரசு அனுப்பி வைத்த கோவிட் நிவாரண மருத்துவ உபகரணங்கள் நான்காவது தவணையாக டெல்லிக்கு நேற்று வந்து சேர்ந்தன.

495 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 200 வெண்டிலேட்டர்கள், போன்ற உயிர்காக்கும் மருத்துவப் பொருட்கள் இதில் அடங்கும். பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் நடத்திய காணொலி உரையாடலையடுத்து இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று பிரிட்டன் அரசுஅறிவித்துள்ளது.

கடந்த ஒருவாரத்தில் 300 டன் எடை கொண்ட கோவிட் நிவாரணப் பொருட்கள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 25 விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டு டெல்லிக்கு வந்துள்ளனய இதில் 5500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும் 3 ஆயிரத்து 200 ஆக்சிஜன் சிலிண்டர்களும் ஒரு லட்சத்து 36ஆயிரம் ரெம்டிசிவர் ஊசிகளும் உள்ளதாக டெல்லி விமான நிலைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவ உதவிகள் மாநில அரசுகளுக்கு பிரித்து அளிக்கப்படுகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments