முகக்கவசம் அணியாதவர்களை தவளை, வாத்து போல நடக்கச் செய்தும், தோப்புக்கரணம் போடச் செய்தும் நூதன தண்டனை..!

0 2343
முகக்கவசம் அணியாதவர்களை தவளை, வாத்து போல நடக்கச் செய்தும், தோப்புக்கரணம் போடச் செய்தும் நூதன தண்டனை..!

த்தியப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு வழங்கப்பட்ட நூதன தண்டனை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தூரில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்திய உள்ளூர் அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டவர்களை வாத்து போல நடக்கச் செய்தும், தோப்புக்கரணம் போடச் செய்தும், தவளை போல தத்திப் போகச் செய்தும் தண்டனை வழங்கினர்.

அவர்களுக்கு முன்னால் ஒருவர் வாத்தியங்களை இசைத்தவாறே சென்றது விமர்சனத்துக்கு உள்ளானது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு இதுபோன்ற உடல் நோகும் தண்டனைகள் தேவையில்லை என விமர்சனம் எழுந்தது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments