புதிய நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான புதிய இல்லம்: 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்

0 1804

புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள பிரதமருக்கான புதிய இல்லம் 2022ம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர், குடியரசுத்தலைவர் இல்லம் கட்டும் பணி அடுத்தாண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் 20,000 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நாடாளுமன்றம், மத்திய அரசின் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 450 கோடி ரூபாய்  மதிப்பில் பிரதமர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோருக்கு, 2022ம் ஆண்டு 75வது சுதந்திர தினத்திற்குள் புதிய இல்லம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments