டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

0 778

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

கடந்த ஒன்றாம் தேதி நாடு தழுவிய அளவில் இத்திட்டம் தொடங்கிய போதும் பல்வேறு மாநில அரசுகள் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததைக் காரணம் காட்டி திட்டத்தைத் தொடங்காமல் ஒத்தி வைத்தன. ஏற்கனவே இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட். கோவாக்சின் ஆகிய தடுப்பூசியுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மேலும் பைசர் போன்ற சில தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரியுள்ளன. இந்நிலையில் டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் பணி மீண்டும் முழுவேகம் பெற்றுள்ளது. நீண்ட வரிசைகளில் காத்திருந்து மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments