மேற்கு வங்க மாநில முதலமைச்சராக நாளை மீண்டும் பதவி ஏற்கிறார் மம்தா பானர்ஜி

0 1033

மேற்குவங்க முதலமைச்சராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ளார் மம்தா பானர்ஜி.

நாளை அவர் கொல்கத்தாவில் பதவியேற்க உள்ள நிலையில் நேற்று ஆளுநர் ஜக்தீப் தங்காரை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.முன்னதாக நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கூட்டத்தில் முதலமைச்சராக மமதா பானர்ஜி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நந்திகிராம் தொகுதியில் அவர் தோல்வியடைந்த நிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த திரணாமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. முடிவு இப்போது தேர்தல் ஆணையத்திடம் இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, இந்திய சட்டப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் குறிப்பிட்ட காலம் வரை அமைச்சராக நீடிக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டினார்.

தமது வெற்றியை அங்கீகரிக்கக் கூடாது என்று நந்திகிராம் தேர்தல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தமக்கு தகவல் வந்திருப்பதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments