வாழ்த்து மழையில் மு.க.ஸ்டாலின்... கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு..!

0 5156
வாழ்த்து மழையில் மு.க.ஸ்டாலின்... கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு..!

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

அண்ணா அறிவாலாயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, சாதி, மத பாகுபாடுகள் இன்றி தங்களது கூட்டணி வெற்றிபெற்றுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய வெற்றியை தேடித் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக, கூறினார்.

 மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், வளமான தமிழகத்தை உருவாக்கும் வகையில் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மு.க.ஸ்டாலின் வியூகம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

அண்ணா அறிவாலயத்தில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஜவாஹீருல்லா திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்துக்களை பரிமாறிக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிவரும் காலங்களில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments