ஆப்கானிஸ்தானில், கடந்த 24 மணி நேரத்தில், தாலிபான் பயங்கரவாதிகள் 141 தாக்குதல்களை நடத்தியதாக தகவல்

0 2160

ஆப்கானிஸ்தானில், கடந்த 24 மணி நேரத்தில், தாலிபான் பயங்கரவாதிகள் 141 தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்கானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகளை மே ஒன்றாம் தேதியுடன் விலக்குவதாக உறுதியளித்திருந்த நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் அதனை செப்டம்பர் பதினொன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தாலிபான்கள் பாதுகாப்பு படைகளுக்குச் சொந்தமான பல்வேறு முகாம்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நிகழ்த்தினர். பாதுகாப்பு படைகள் நடத்திய எதிர் தாக்குதலில் தாலிபான் தளபதி உள்பட நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக  ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments