அதிகாரிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

0 4870
அதிகாரிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள்,  திமுக தலைவர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க எத்தகைய கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம் என ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆலோசனைக்குப் பிறகு புறப்பட்டுச் சென்ற, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொடர்பாகவே ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

 ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து தலைமை செயலாளர்,சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்துவற்கான நடவடிக்கைகளை தொய்வி இன்றி தொடருமாறு ஸ்டாலின் அறிவுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை போன்று பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்தை வழங்க வேண்டும் என்றும், ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் தடை இன்றி கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே சென்னை பெருநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்,  தமிழக காவல்துறை இயக்குனர் திரிபாதி,  உள்ளிட்டோர்  ஆழ்வார்பேட்டையிலுள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று ஆலோசனை மேற்கொண்டனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments