ஓய்வுபெற்ற காவல் துறை ஐ. ஜி மரணம்... உடலை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள்

0 28517

கொரோனா நோய் தொற்றால் சென்னை கின்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரியை சார்ந்த ஓய்வுபெற்ற காவல் துறை ஐ. ஜி ஜான் நிக்கல்சன் வயது 68 சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அவரது உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி‌ நெல்லை மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர்களை தொடர்பு கொண்டு உடலை நாகர்கோவில் கொண்டு வந்து நல்லடக்கம் செய்ய உதவி கோரினர். இதையடுத்து சென்னை ஆலந்தூர் தொகுதி துணைத் தலைவர் ஜாஹிர் ஹுசைன் மருத்துவமனையில் சுகாதார துறை அதிகாரிகளை சந்தித்து உறிய ஆவனங்களை சமர்பித்து உடலை வாங்கி ஆம்புலன்ஸ் மூலம் குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார்.

குமரியில் இன்று காலையில் தயாராக இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வ குழுவினர் மாவட்ட செயலாளர் சத்தார் தலைமையில் மரைந்த காவல் துறை ஐ. ஜி ஜான் நிக்கல்சன் அவர்களின் சொந்த தோட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் மதப்பிரகாரம்‌ நல்லடக்கம் செய்தனர்.

பாபாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வ பணிகளுக்கு ‌குடும்த்தினர்‌ நன்றி தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments