தாயிடம் ஆசி பெற்ற ஸ்டாலின்... அண்டை வீட்டாரையும் சந்தித்து நெகிழ்ச்சி!

0 4138
தாயிடம் ஆசி பெற்ற ஸ்டாலின்... அண்டை வீட்டாரையும் சந்தித்து நெகிழ்ச்சி!

முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தந்தை கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றதோடு, அண்டை வீட்டாரிடமும் சென்று நலம் விசாரித்து ஆசி பெற்றார். 

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெறச் சென்றார். தாம் பிறந்து வளர்ந்த, அந்த இல்லத்திற்குள் நுழைந்தவுடன் உணர்ச்சிமயமாகக் காணப்பட்டார்.

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலினுக்கு குடும்ப உறுப்பினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

தாயாரிடம் ஆசி பெற்றுவிட்டு வெளியே வந்தவர், யாரும் எதிர்பாராத விதமாக எதிர்வீட்டுக்குச் சென்றார். பிள்ளைப்பருவத்தில் உடன் விளையாடிக் களித்த பால்ய நண்பர்களின் வீடு என்ற வகையில், உரிமையோடு சென்ற மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நலம் விசாரித்தார்.

மு.க.ஸ்டாலினை சிறுவயது முதலே தெரியும் என்றும், முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அவர், சிறுவயது நினைவுகளை மறவாமல் தங்களது வீட்டிற்கு வந்தது பெருமை அளிப்பதாகவும் அண்டை வீட்டு மூதாட்டி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments