தமிழ்நாட்டில் இன்று 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று

0 2538

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழ்நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. புதிதாக 20,952 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஒரே நாளில் பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 18,016 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . சென்னையில் 38 பேர் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 122 பேர் உயிரிழந்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த 17 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில், மேலும் 6,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,618 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,566 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

திருவள்ளூர் - 1207, காஞ்சி - 835. தூத்துக்குடி - 707, திருச்சி - 653 , ஈரோடு - 652, மதுரை - 477, திருப்பூர் - 477 , கிருஷ்ணகிரி - 445 மற்றும் திருநெல்வேலியில் 403 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,23,258 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிரார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments