தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி

0 3902
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி

மிழக சட்டமன்ற தேர்தலில் பத்து மாவட்டங்களில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் என 4 தொகுதிகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது.

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகளை திமுகவும், மயிலாடுதுறையை திமுக கூட்டணி கட்சியான காங்கிரசும் கைப்பற்றியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளை திமுக கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments