கொரோனா பரவலின் தாக்கம் குறித்து இப்படியும் கண்டுபிடிக்கலாம்.... பிரிட்டனில் நடந்த ’கோவிட் பைலட் திருவிழா’.. !

0 1789

பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகளை எவ்வாறு பாதுகாப்பாக தளர்த்தலாம் என்பதற்கான முன்முயற்சியாக கோவிட் பைலட் திருவிழா (pilot festival) என்ற பெயரில் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, லிவர்பூல் நகரில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியில்லாமல் இரவு பார்ட்டியில் கூடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்களுக்கு 5 நாட்களுக்கு பின் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். வைரஸ் பரவலின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை அறிந்து, சகஜ நிலையை மீண்டும் கொண்டுவர அந்நாட்டு அரசு இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments