நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல்

0 4574

 நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தாலும், அது பொருளாதார பாதிப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் வேலையிழப்புகளுக்கு காரணமாகி விடும் என மத்திய அரசு கருதுகிறது.

தொற்று பரவல் 15 விகிதத்திற்கும் அதிகமாக உள்ள சுமார் 150 மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கை கொண்டுவரலாம் என சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. என்றாலும், கும்பமேளா போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள் சூப்பர்ஸ்பெரட்டர்களாக மாறி இரண்டு மற்றும் 3 ஆம் நிலை நகரங்களில் வைரஸ் தொற்றை பரப்பக்கூடும் என்ற அச்சமும் உருவாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments