தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வெற்றி தோல்வி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு : மறு எண்ணிக்கை நடத்தக் கோரிக்கைகள் வரவில்லை - சத்ய பிரதா சாஹு

0 2811
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வெற்றி தோல்வி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு : மறு எண்ணிக்கை நடத்தக் கோரிக்கைகள் வரவில்லை - சத்ய பிரதா சாஹு

மிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வெற்றி, தோல்வி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, எந்த தொகுதியிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கைகள் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் முடிவுகள் ஆளுநருக்கு வழங்கப்படும் என்றார். மாலைக்குள் அனைத்து தேர்தல் பணிகளையும் நிறைவு செய்து ஆளுநருக்கு அறிக்கை அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சத்ய பிரதா சாஹு  தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments