இந்தியாவில் ஏப்ரல் 26 முதல் மே 2 வரை மட்டும் 26 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு; 23,800 பேர் உயிரிழப்பு..!

0 3169
இந்தியாவில் ஏப்ரல் 26 முதல் மே 2 வரை மட்டும் 26 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு; 23,800 பேர் உயிரிழப்பு..!

ந்தியாவில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 26 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

23 ஆயிரத்து 800 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். ஏப்ரல் 26 முதல் மே 2 வரையிலான 7 நாட்களில், உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தது. ஒருநாள் உச்சமாக வெள்ளியன்று நான்கு இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அமெரிக்காவில் ஜனவரி 4 முதல் 10 வரையிலான ஒருவாரத்தில் 17 லட்சத்து 70 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதே இதற்கு முன் உச்ச அளவாக இருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments