நீதிமன்ற விசாரணைகளை வெளியிடாமல் ஊடகங்களை தடுக்க முடியாது :உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

0 1650
நீதிமன்ற விசாரணைகளை வெளியிடாமல் ஊடகங்களை தடுக்க முடியாது :உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

நீதிமன்ற விசாரணைகளை வெளியிடாமல் ஊடகங்களை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை இந்த அளவுக்கு பரவ பிரச்சார கூட்டங்களை அனுமதித்த தேர்தல் ஆணையமே காரணம் என்றும், தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றச்சாட்டை கூட சுமத்தலாம் எனும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தை பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளியிட்டன.

உயர்நீதிமன்ற கருத்தை வெளியிடுவதில் இருந்து ஊடகங்களை தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் ஊடகங்கள் சக்தி வாய்ந்தவை என்றும் நீதிமன்ற விசாரணையில் என்ன பேசப்படுகிறது என்பதை மக்கள் அவற்றின் வாயிலாக அறிய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments