விண்வெளி நிலையத்தை சீனா ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமா ?

0 1257
விண்வெளி நிலையத்தை சீனா ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமா ?

சீனா விண்வெளியில் அமைக்க உள்ள தனது விண்வெளி ஆய்வு நிலையத்தை  ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடும் என துறை சார்ந்த நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை சுற்றி வரும் நிலையில் சீனா தனியாக Tianhe core module cabin என்று ஒரு விண்வெளி கட்டுமான குறுங்கலத்தை கடந்த 27 ஆம் தேதி விண்ணில் செலுத்தி அது சுற்றுப்பாதையில் உள்ளது.

சீனா அனுப்பி உள்ள கட்டுமான  குறுங்கலத்தின் உதவியுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த விண்வெளித் திட்டத்தில் பங்கேற்குமாறு சில நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்தாலும், இந்த திட்டத்தின் பின்னணியில் ராணுவ திட்டங்கள் இருக்கலாம் என மேற்கத்திய நாடுகள் ஐயம் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments