வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்

0 1691
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 7ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சில தென் மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பீட்டு ஈரப்பதம் காரணமாக இயல்பான வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 11 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments