கர்நாடகாவில் ஆக்சிஜன் கிடைக்காதது மற்றும் இதர காரணங்களுக்காக 24 நோயாளிகள் மரணம்

0 1355
கர்நாடகாவில் ஆக்சிஜன் கிடைக்காதது மற்றும் இதர காரணங்களுக்காக 24 நோயாளிகள் மரணம்

ர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் கிடைக்காதது மற்றும் இதர காரணங்களுக்காக கொரோனா நோயாளிகள் உட்பட 24 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.

சாமராஜநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சோக சம்பவத்தில் 11 கொரோனா நோயாளிகள் இறந்தனர். எஞ்சியவர்கள் இதர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் உடல் கூறாய்வு அறிக்கைகள் கிடைத்த பிறகு இது குறித்து கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என அவர் கூறினார். 24 நோயாளிகள் இறந்தது குறித்து மாவட்ட ஆட்சியருடன் கேட்டறிந்த முதலமைச்சர் எடியூரப்பா , இது குறித்து விவாதிக்க நாளை அமைச்சரவை கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments