சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி : எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை வழங்கி ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து

0 2887
சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி : எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை வழங்கி ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து

ட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், எய்ம்ஸ் என எழுதப்பட்டிருந்த செங்கலை வழங்கி, மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, தான் போட்டியிட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற கையோடு, எய்ம்ஸ் என எழுதப்பட்டிருந்த செங்கலை வழங்கி மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments