திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் சந்திப்பு..! சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றிக்கு நேரில் வாழ்த்து

0 1481

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

திமுக தலைவர் என்ற முறையில், மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் செல்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இன்று அவர் அண்ணா அறிவாலயம் சென்றபோது வாழ்த்து முழக்கங்கள் வேறாக ஒலித்தன. அண்ணா அறிவாலயமும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதேபோல பல்வேறு அரசியல் தலைவர்கள் வருகையால் அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்பட்டது.

ந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக, முத்தரசன் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், வளமான தமிழகத்தை உருவாக்கும் வகையில் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ண்ணா அறிவாலயம் வந்து, முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்திய, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய வெற்றியை தேடித் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மு.க.ஸ்டாலின் வியூகம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments