இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 3,417 பேர் கொரோனாவுக்கு பலி

0 1606
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 3,417 பேர் கொரோனாவுக்கு பலி

டந்த 24 மணி நேரத்தில், 3 லட்சத்து 68ஆயிரத்து 147 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்று பாதித்து சிகிச்சையில்இருந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த காலகட்டத்தில் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 417 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 959 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். தொற்று பாதித்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 34 லட்சத்தை கடந்துள்ளது.

நாட்டில் இதுவரை 15 கோடியே 71 லட்சத்து 98 ஆயிரத்து 207 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments