முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில் கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை

0 3159
முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில் கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை

முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று, தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். கோபாலபுரம் இல்லத்திற்குள் சென்றபோது மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமயமாகக் காணப்பட்டார்.

கலைஞர் மறைவுக்குப் பிறகு, திமுகவிற்கு தலைமை தாங்கி கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக முதலமைச்சர் வேட்பாளராக களம் கண்டு, வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.

அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிக பலத்தோடு மகத்தான வெற்றிபெற்று, தமிழகத்தில் திமுக-வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளார். இந்நிலையில், இன்று காலை சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், கலைஞரின் மகனாக தாம் பிறந்து வளர்ந்த, அந்த இல்லத்திற்குள் நுழைந்தவுடன் உணர்ச்சிமயமாகக் காணப்பட்டார்.

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலினுக்கு குடும்ப உறுப்பினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments