சென்னையில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி..!

0 3341
சென்னையில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி..!

சென்னையில் திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 9 புதுமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கசாலியைவிட 68 ஆயிரத்து 979 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அண்ணா நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் 26 ஆயிரத்து 866 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் கோகுல இந்திராவைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜே.ஜான் எபினேசர் 34 ஆயிரத்து 254 வித்தியாசத்தில் சட்டப்பேரவைக்குத் தேர்வு பெற்றுள்ளார்.

எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் ஜான்பாண்டியனை விட 38 ஆயிரத்து 768 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேகர் பாபு, 62 ஆயிரத்து 847 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பா.ஜ.க. வேட்பாளரைத் தோற்கடித்தார்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் த.வேலு 9,190 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.வின் ஆர்.நட்ராஜ், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் தோல்வியடைந்தனர்

பெரம்பூர் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலனைவிட 54 ஆயிரத்து 487 வாக்குகள் அதிகம் பெற்றார்

ராயபுரம் திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி 24 ஆயிரத்து 274 வாக்கு வித்தியாசத்தில் ஜெயக்குமாரைத் தோற்கடித்தார்.

சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா சுப்ரமணியன் 79 ஆயிரத்து 971 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி தோல்வியடைந்தார்

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் 33 ஆயிரத்து 044 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் குஷ்பூவைத் தோற்கடித்தார்.

திருவிக நகர் திமுக வேட்பாளர் தாயகம் கவி 54 ஆயிரத்து 681 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு தேர்வாகி உள்ளார்.

தியாகராயநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹஸன் மௌலானா 3772 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா 18402 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அதிமுக வேட்பாளர் விருகை வி.என்.ரவி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பாடலாசிரியர் சினேகன் தோல்வியடைந்தனர்.

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றியழகன் அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரனைவிட 36746 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments