"மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றம்

0 8379

மத்திய மாநில அரசுகள் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் முதியோர், நோய்வாய்ப்பட்ட நலிந்த பிரிவினரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்த போதும் தொற்று நோயின் சங்கிலியை அறுப்பதற்கு ஊரடங்கை பரிசீலிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே நான்கு வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க மருத்துவர்கள் அடங்கிய நிபுணர்க் குழுவினர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments