கலைஞர் வழிநின்று கடமையை ஆற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

0 1559

மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பணியாற்றுவோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்ற சான்றிதழை பெற்ற பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மகத்தான வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
பத்தாண்டு காலமாக தமிழகம் பாதாளத்திற்கு போய் உள்ளதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், அதனை சரி செய்வதற்காகவே தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

தங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தங்கள் பணி அமையும் என்றும், வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்தார்

கொரோனா நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு பதவிப் பிரமாண நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையிலேயே எளிமையாக நடத்தப்படும் என்றார்.

வாழ்த்து தெரிவித்த தேசிய தலைவர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனை ஏற்று செயல்படுவதாகவும் அவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments