வெற்றிக் கனியை ருசித்த திமுக... மூத்த தலைவர்கள் வெற்றி..!

0 9183

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் வெற்றி பெற்றுள்ளனர். 

சென்னை கொளத்தூர் தொகுதியில் இருந்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தொழுதியில் 54 ஆயிரத்து 323 வாக்குகள் வித்தியாசத்தில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமை ஸ்டாலின் வீழ்த்தியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சுமார் ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

திருச்சி மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சுமார் 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தமது வெற்றியை பதிவு செய்தார்.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் 55 ஆயிரத்து 550 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, வெற்றி பெற்றார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டார்டர் எழிலன், தம்மை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குஷ்புவை 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இதுதவிர,முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, சு.முத்துசாமி, ஏ.வ. வேலு, கே.கே.எஸ். எஸ்.ஆர்,ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தமது வெற்றியை பதிவு செய்ய, ஆலங்குளம் தொகுதியில் மற்றொரு முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தோல்வி
அடைந்தார்.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலும் திமுக கூட்டணி, ஒட்டு மொத்த தொகுதிகளையும் அள்ளியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments