கேரளாவில் மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி!

0 1495

கேரள அரசியலில் ஒரு திருப்புமுனையாக 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே ஆளும் இடது ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தது. ஆட்சி மாற்றம் நடந்து கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

கடைசியாக வந்த தகவலின் படி இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களிலும், கால்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதே எண்ணிக்கையில் தேர்தல் முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி 91 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த முறை பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட மெட்ரோமேன் ஸ்ரீதரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments