கொரோனா கட்டுப்பாடு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

0 1561

கொரோனா கட்டுப்பாட்டில் கூடுதல் முன்கள பணியாளர்களைப் பயன்படுத்துவது பற்றி மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது எம்பிபிஎஸ், நர்சிங் படிக்கும் இறுதியாண்டு  மாணவர்களையும், மருத்துவப் படிப்பு முடித்த இளைய மருத்துவர்களையும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்ட்டாரங்கள் தெரிவித்தன.

நீட் தேர்வைத் தள்ளிவைப்பது, கொரோனா பணிக்கு வரும் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு வருங்காலத்தில் அரசுப் பணி அளிப்பது, அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது உள்ளிட்ட முடிவுகளும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆக்சிஜன் இருப்பு நிலவரம், அதன் பற்றாக்குறை உள்ளிட்ட விஷயங்களும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments