120 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஜெர்மனியிலிருந்து டெல்லி வருகை

0 2910
120 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஜெர்மனியிலிருந்து டெல்லி வருகை

ஜெர்மனியிலிருந்து 120 வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய சிறப்பு விமானம் டெல்லி விமானநிலையத்தை வந்தடைந்தது.

கொரோனா இரண்டாவது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு உலகின் பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதன் எதிரொலியாக ஜெர்மனியில் இருந்து ராணுவ விமானம் மூலம் வென்டிலேட்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவை தவிர நடமாடும் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை தொடங்குவதற்கும் அதற்காக பயிற்சி அளிக்க 13 நிபுணர்களையும் ஜெர்மனி அனுப்பியுள்ளது.

ஜெர்மனியின் இந்தப் பங்களிப்புக்காக அந்நாட்டு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி ட்வீட் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments