கொரோனா பாதிப்பால் டெல்லியில் மேலும் ஒருவாரம் பொதுமுடக்கம்

0 1879
கொரோனா பாதிப்பால் டெல்லியில் மேலும் ஒருவாரம் பொதுமுடக்கம்

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விளக்கமளித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனாவால் தலைநகரில் பேரழிவு தொடர்வதாகத் தெரிவித்துள்ளார். எனவே திங்கள்கிழமை முடிவடைய இருந்த பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் தற்போது பெருந்தொற்றினால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு நடுப்பதியில் பதிவான எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments