வாக்கு எண்ணிக்கை நாளான்று தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை தொண்டர்கள் பின்பற்ற வேண்டும்: அதிமுக தலைமை கழகம் அறிவுறுத்தல்

0 2679

கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை நாளான்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தொண்டர்களுக்கு அதிமுக தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கையின் போதும், முடிவுகள் வெளியாகும் வேளையிலும் உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்கள்படி தொண்டர்கள் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்றும், வெற்றிக் கொண்டாட்டங்களை மிக, மிக அவசியமான நெறிகளுக்கு உட்பட்டு வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் நடத்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments