மே 4 முதல் இந்தியர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிப்பு

0 2240

இந்தியாவில் இருந்து வருகிற 4 ஆம் தேதி முதல் அமெரிக்கா வருவதற்கு, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அமெரிக்கா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அமெரிக்கர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே, இந்தியா செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், ஒருவேளை இந்தியாவில் அமெரிக்கர்கள் தங்கி இருந்தால், எவ்வலவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாடு திரும்ப வேண்டும் என்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments