சென்னையில் "ரெம்டெசிவிர்" மருந்துக்காக 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள்

0 1014

ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை என சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தும் நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் 6ஆவது நாளாக அம்மருந்தை வாங்க நூற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

‘ரெம்டெசிவிர்’ மருந்து போட்டுக்கொண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை குறைக்கலாமே தவிர இந்த மருந்தை போட்டால்தான் கொரோனாவில் இருந்து குணமடைவோம் என்ற சூழ்நிலை இல்லை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே இது தேவைப்படலாம் என்றும் இரு தினங்களுக்கு முன் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 20 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பரிதவிப்புடன் சென்று பலரும் மருந்தை வாங்கிச் சென்றனர். மாலை 5 மணியோடு மருந்து விநியோகம் முடிந்த நிலையில், டோக்கன் வைத்திருந்தவர்கள் மீண்டும் திங்கட்கிழமை வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments