ஓய்வுபெற்ற காவல்துறை டிஐஜி, ஜான் நிக்கல்சன் கொரோனாவால் பலி

0 3741

ஓய்வு பெற்ற காவல்துறை டிஐஜி, ஜான் நிக்கல்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

1979 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்த ஜான் நிக்கல்சன், டிஎஸ்பியை அடுத்து எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து மாநில போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாக இருந்த போது டிஐஜியாக பதவி உயர்வு பெற்றதை அடுத்து திண்டுக்கல் சரக டிஐஜி, சிபிசிஐடி டிஐஜி ஆகிய பொறுப்புகளை கவனித்து வந்த அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி, கொரோனா அறிகுறிகளுடன் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டு கொரோனா சிறப்பு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments