புதுச்சேரியில் நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை... நள்ளிரவுக்குள் முடிவுகள் வரும் என எதிர்பார்ப்பு !

0 2046

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில், முடிவுகள் நள்ளிரவுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 324 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். மொத்தம் ஆயிரத்து 558 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. 81.64 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 23 தொகுதிகளுக்கும், காரைக்காலில் 5 தொகுதிகளுக்கும் , மாஹே, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு தொகுதிக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றிலும் துணை ராணுவப் படை, ஐஆர்பிஎன், உள்ளூர் போலீசார் என நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments