ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் விடுவிப்பு... புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு

0 12317

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒரு வெற்றி 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த மோசமான ஆட்டத்திற்கு அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னரே காரணம் என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக நியூசிலாந்து நாட்டை சேர்ந்த கேன் வில்லியம்சன் அணியை வழிநடத்துவார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments