கர்நாடக பல்லாரி மாநகராட்சி உட்பட 10 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல்: அநேக இடங்களில் காங்கிரஸ் வெற்றி

0 1533

கர்நாடக மாநிலம் பல்லாரி மாநகராட்சி உட்பட 10 நகர உள்ளாட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மொத்தம் 265 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 121 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பா.ஜனதா 57 வார்டுகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம்  66 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

எஸ்.டி.பி.ஐ. கட்சி 5 வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்திலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஒரு இடத்திலும், 14 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக  5 நகராட்சிகளில் 3 நகராட்சியை காங்கிரஸ் தன்வசப்படுத்தி கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments