ஆர்டர் கொடுத்து வாங்கிய நகைகள் தரமற்றதாக இருந்ததாக புகார்.. உறவினர்களுடன் வந்து நகைக்கடையை சூறையாடிய வழக்கறிஞர்!

0 20046

தஞ்சாவூரில் வாங்கிய நகைகள் தரமற்றதாக இருந்ததாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் உறவினர்களுடன் வந்து நகைக்கடையை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காந்திஜி சாலையில் ஜெயின் ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இங்கு தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமணத்திற்காக ஆர்டர் கொடுத்து நகை வாங்கியுள்ளார். இந்த நகைகள் தரமற்றதாக இருந்ததாக கூறி கடைக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், ஆத்திரத்தில் உறவினர்களுடன் சேர்ந்து கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இந்த வழக்கில் கடையை சூறையாடிய 3 பேர் மீதும், நகைக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் மீதும் தஞ்சை மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments